தமிழக அரசு அனுமதி பெற்றது 17-M-027-0518

"சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், சாமி நாய்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் விவேகானந்தா கேந்திரிய வித்யாலயா பள்ளி யின் Google map மற்றும் விலாசத்தை பயன்படுத்தி முகம் தெரியாத நபர்கள் பல ஆர்டர்களை போலியாக கொடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர் . இந்த ஆர்டர்களுக்கும் பள்ளிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.எனவே எங்கள் பள்ளி Google map பயன்படுத்தி எந்த போலியான ஆர்டர்கள் வந்தாலும் அவற்றை நம்பி யாரும் தங்கள் பணம் அல்லது பொருட்களை இழந்து விட வேண்டாம் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்."

Welcome to
Vivekananda Kendriya Vidyalaya Matric. School

நம் விவேகானந்தா கேந்திரிய வித்யாலயா மெட்ரிக் பள்ளி 1993 ம் ஆண்டு S K சிவக்குமார் அவர்களால் 15 மாணவர்களை கொண்டு ஒரு சிறிய வாடகை கட்டிடத்தில் தனது கல்விப் பணியை தொடங்கினார் . அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் அதிகம் இல்லை. பள்ளிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வைக்க கிராமப்புற பெற்றோர்களுக்கு வசதி இல்லை.எனவே கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பள்ளியை 1993 ம் ஆண்டு நிறுவினார் இப்பள்ளி அன்னை சம்பூர்ணம் அறக்கட்டளையின் மூலம் இயங்கி வருகிறது.தற்போது இப்பள்ளி 580 மாணவர்களுடன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

image