தமிழக அரசு அனுமதி பெற்றது 17-M-027-0518
நம் விவேகானந்தா கேந்திரிய வித்யாலயா மெட்ரிக் பள்ளி 1993 ம் ஆண்டு S K சிவக்குமார் அவர்களால் 15 மாணவர்களை கொண்டு ஒரு சிறிய வாடகை கட்டிடத்தில் தனது கல்விப் பணியை தொடங்கினார் . அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் அதிகம் இல்லை. பள்ளிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வைக்க கிராமப்புற பெற்றோர்களுக்கு வசதி இல்லை.எனவே கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பள்ளியை 1993 ம் ஆண்டு நிறுவினார் இப்பள்ளி அன்னை சம்பூர்ணம் அறக்கட்டளையின் மூலம் இயங்கி வருகிறது.தற்போது இப்பள்ளி 580 மாணவர்களுடன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.